2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கல்வி அபிவிருத்தி மாநாட்டின் இரண்டாம் நாள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வட மாகாண கல்வி முறையிலான மீளாய்வும் கல்வி ஆலோசனை செயலமர்வின் (கல்வி அபிவிருத்தி மாநாடு) இரண்டாம் நாள் நிகழ்வும் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தலைமையில் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்பத்தில் இன்று (24) நடைபெற்றது.

இன்றைய மாநாட்டில் தேசிய மட்டத்திலான பரீட்சைக்கு கற்பித்தலும் அதற்கு பயிற்றுவித்தலும், கல்வியில் விசேட தேவைகள், முன்பிள்ளைப் பருவ மாணவர்களின் கல்வியும் அபிவிருத்தியும், நிர்வாகம், பதவிகளுக்கான நியமனம், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றம், கல்வி முகாமைத்துவம் தகவல் முறைமை புள்ளிவிபரம் சேகரித்தல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதலும் வெளியிடலும், திட்டமிடல் நிதி முகாமைத்துவம், சமூக உள ரீதியாக மாணவர்கள் ஆசிரியர்களின் நலன்கள், கல்வி அபிவிருத்திக்கான நிர்வாகக் கட்டமைப்பை தீர்மானம் செய்தல் மற்றும் தொடர்ச்சியான கல்வி செயற்பாடுகளும், நிதி ஊழியர்கள் ஆட்சேர்த்தல் மாணவர்களின் தேவைகள் பாடசாலைகளினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி, தமிழ் மொழி மூலமான கல்வியும் மற்றும் ஆசிரியர்களின் கல்வி அபிவிருத்திக்கான நிறுவனமயப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இன்றைய மாநாட்டில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், ஆலோசகர் கலாநிதி எதிர்வீரசிங்கம், மாகாண கல்வி பணிப்பாளர், மாவட்ட கல்விப் பணிப்பாளர்களின் கோட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இலங்கைப் பரீட்சைத் தினைக்களத்தின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 23 பேருமாக மொத்தமாக 280 பேர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--