2021 மே 15, சனிக்கிழமை

முகாம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்த பிரித்தானிய அமைச்சர்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 30 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் மாணவர்களுக்கு ஆங்கில சொற்களை சரியான முறையில் உச்சரிக்க, பிரித்தானியாவின் வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வையர் கற்றுக்கொடுத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வியாழக்கிழமை (29) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வலிகாமம் வடக்கில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து சபாபதிப்பிள்ளை முகாமில் வசித்து வரும் மக்களைச் சந்தித்து, முகாம் மாணவர்களுக்கு காலணியும் வழங்கினார்.

அங்கிருந்த மாணவர்களுடன் இலகு ஆங்கிலத்தில் உரையாடினார். மாணவர்கள் ஆங்கில சொற்களை சரியான முறையில் உச்சரிக்க தவறிய போது, சரியான உச்சரிப்பு வரும்வரை மாணவர்களுக்கு ஆங்கில சொற்களின் உச்சரிப்புக்களை சொல்லி கொடுத்தார்.

குறிப்பாக காலணிக்கான ஆங்கில சொல்லின் சரியான உச்சரிப்பை மாணவர்கள் சொல்லும் வரை உச்சரிப்பை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .