2021 மே 08, சனிக்கிழமை

சிந்தனை ஆற்றலை மாணவர்களிடையே அதிகரிக்கவேண்டும்

Sudharshini   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எஸ்.குகன்

பாடசாலைகள் தனியே கல்வி அறிவை வழங்கும் இடமாக இல்லாமல் மாணவர்களுக்கு சிந்தனை ஆற்றலை ஊக்குவித்து மற்றவர்களுடன் இணங்கி பழகும் தொடர்பாடலையும் வளத்தெடுக்க வேண்டும் என வலிகாமம் கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


மானிப்பாய் இந்து கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,


பாடசாலைகள் மாணவர்களின் தரத்தை சோதிப்பதாக அமையவேண்டும். முன்னர் குறைவாக இருந்த தரம் மாணவர்களிடையே முன்னேற்றகரமாக மாற்றப்படவேண்டும். கல்வி நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் மாணவர்கள் தமது இலக்கை அடைய வேண்டும்.


மாணவ பருவத்தில் பெறக்கூடியவற்றை பெறவேண்டும். குழந்தை 5 வயது வரை அனுபவ ஆற்றலால் அறிவை பெற்றுக்கொள்கின்றது. அது படிப்படியாக வளர்ந்து மாணவப்பருவத்தில்  பெறக்கூடியவற்றைப் பெறவேண்டும்.


மாணவர்கள் எந்த நோக்கோடு பாடசாலைக்கு வருகின்றார்கள் என்பது தொடர்பில் அவர்களிடம் இலக்கு இருக்க வேண்டும்.  மாணவர்கள் இலக்கைத் தொலைத்தவர்களாக இருக்கக்கூடாது.  இலக்கு என்பதை ஒவ்வொருவரும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.


மாணவ பருவத்தில் தேவையில்லாது தடைகளை தருகின்றவற்றை களைந்தெடுத்து சரியான திசைநோக்கி செல்ல வேண்டும். இலக்கு மிக வலிமையானதாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X