2021 மே 10, திங்கட்கிழமை

யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரிக்கு அழகியற் பாட கற்கைநெறி அவசியம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா


யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் அழகியற் பாட கற்கை நெறியை மீள ஆரம்பிக்கவேண்டியது அவசியம் என கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் திங்கட்கிழமை (09) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


கல்வியற் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வந்த அழகியல் கற்கைநெறி கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறியை கற்பதற்கு மாணவர்களும் வளங்களும் போதியளவு இருந்தும் கற்கைநெறி நிறுத்தப்பட்டுள்ளது.


ஆரம்பக்கல்வி, தமிழ், ஆங்கில மொழிகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும் விசேட கல்வி ஆகிய 7 கற்கைநெறிகளே தற்போது கற்பிக்கப்படுகின்றன.


கடந்த 21 ஆம் திகதி புதிதாக 14 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் தற்போதுள்ள பாடங்களுக்கு விரிவுரையாளர் பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.


நடனம், சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும், இந்து நாகரீகம், கிறிஸ்தவம் ஆகிய பாடங்கள் தற்போது இல்லை.

189 மாணவர்களில் 165 பெண் ஆசிரிய மாணவர்களும், 34 ஆண் ஆசிரிய மாணவர்களும் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X