2021 மே 06, வியாழக்கிழமை

கோமகனை விடுவிக்குமாறு போராட்டம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை விடுதலை செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வடமாகாண சபையின் முன்பாக செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடத்தினர்.  

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போது முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விடுதலைக்கான மக்கள் அணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கோமகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோமகன், தற்போது புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபை தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .