2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளை இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் காணக்கூடியதாக இருந்தது.

'போலி தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே' எனக்குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகள், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டதைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் என சுவரொட்டியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X