2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கல்யாண இராமனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயது பெண்ணொருவரை திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜையை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் கணேசராசா மாணிக்கவாசகர் புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக திருகோணமலை பொலிஸிலும் முறைப்பாடொன்று இருப்பதால், திருகோணமலை பொலிஸாருக்கு அறிக்கை வழங்கும்படியும் சந்தேகநபரின் வங்கிக் கணக்கை இடைநிறுத்தி வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர் தொடர்பான விபரங்களை கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸாருக்கு வழங்கும்படியும் நீதவான் கூறினார்.

56 வயதுடைய முதியவர் 20 வயது யுவதியொருவரை திருமணம் செய்யப்போவதாக அறிந்த அப்பிரதேச சிவில் குழு உறுப்பினர்கள், நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு இது தொடர்பான தகவல்களை வழங்கினர்.

பொலிஸ் விசாரணையின் போது சுவிஸிலிருந்து வந்ததாக தெரிவித்த அவரிடம் கடவுசீட்டு உட்பட எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை என்று தெரியவந்தது. இந்நிலையில், அவரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .