2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பொலிகண்டி, ஆலடி வைரவர் கோயிலடி பகுதியில் 9 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 43 வயதுடைய சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 12ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா வியாழக்கிழமை (30) உத்தரவிட்டார்.

சிறுமியின் அயல்வீட்டுக்காரரான சந்தேகநபர், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்திருந்த சிறுமியை தாய் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி தாய்க்கு கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் தாய் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (29) முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .