2021 மார்ச் 04, வியாழக்கிழமை

யாழில் நண்டு, இறால், கணவாய்க்கு தட்டுப்பாடு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய சந்தைகளில் நண்டு, இறால் மற்றும் கணவாய் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக மீன் ஏலம் கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ சிவப்பு இறால் 800 ரூபாய் தொடக்கம் 900 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கறுப்பு இறால் 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், நண்டு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கணவாய் கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த காலங்களைவிட சுமார் கிலோவுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் இவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஏலம் கூறுபவர்கள் கூறினர்.

விடுமுறையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் நண்டு, இறால் மற்றும் கணவாய் என்பவற்றின் மீது அதிக நாட்டம் கொண்டமையால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஏலம் கூறுபவர்கள் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .