2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இசைக் கச்சேரி மூலம் தேர்தல் பிரசாரம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர் சிங்கர் பாடகர்களின் இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் வரவழைக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

இதை சில சுயேட்சைக் குழுக்களும் வேறுசில கட்சிகளும்கூட பின்பற்றி வருகின்றன. இதற்காக இசைக் கச்சேரிகள் நடத்துபவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளனர்.

தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலம் ஆகையால், ஒலிபெருக்கிகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பொலிஸார் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளை வழங்கி வரும் நிலையில், ஒலிப் பெட்டிகள் மூலம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .