2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கைகலப்பில் ஈடுபட்ட நால்வர் படுகாயம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை கைகலப்பில் ஈடுபட்ட 4பேர், சாவகச்சேரி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சரசாலை வடக்கைச் சேர்ந்த சுந்தரராஜா சுரேஸ் (வயது 24), மட்டுவில் கிழக்கைச் சேர்ந்தவர்களான சி.பிரசன்னா (வயது 27), தனியார் பஸ் நடத்துநரான செ.திருஈஸ்வரன் (வயது 32) ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த பிரபாகரன் மதிவதணன் (வயது 25) யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செ.திருஈஸ்வரன் என்பவர், தனத மோட்டார் சைக்கிளில் சாவகச்சேரி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், அவரை வாளால் வெட்டியதால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, திருஈஸ்வரன் மீது தாக்குதல் நடத்திய மூவரும் போத்தல் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருஈஸ்வரன் என்பவரே தங்களை போத்தல்களால் தாக்கியதாக பொலிஸாரிடம் அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .