Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
ஆவணி மாதத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய தேசிய அளவிலான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் யாழ். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்த மாதத்தில் பிணை வழங்க முடியாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரில், ஒருவரது பிணை மனு திங்கட்கிழமை (03) மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதனால் இந்த பிணை மனுத் தொடர்பிலான விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
பண்டத்தரிப்புச் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் வாகனத்தில் 81 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு பேரை இளவாலைப் பொலிஸார் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி கைது செய்தனர்.
உதயராசா ஞானசீலன், சிவகுமார் கார்த்திக் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர். இவர்களின் வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் உதயராசா ஞானசீலன் தனக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணியூடாக மேல் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார். அதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
16 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
3 hours ago