2021 மார்ச் 06, சனிக்கிழமை

வயோதிபர்களை தாக்கி கொள்ளையடித்துச் சென்ற மூவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். வரணிப் பகுதியில் 3 முதியவர்களை கடந்த 3ஆம் திகதி இரவு தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற 3 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார்.

அத்துடன், அத்தினத்தில் மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி வரணிப் பகுதியிலுள்ள வீட்டொன்றுக்குள் நுழைந்த மேற்படி முன்று சந்தேக நபர்களும், அவ்வீட்டிலிருந்த வயோதிபர்கள் மூவரையும் தாக்கிவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, வயோதிபர்கள் கூக்குரலிடவே கொள்யையடித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதன்போது, கொள்ளையர் ஒருவருடைய அலைபேசி தவறி வீழ்ந்துள்ளது.

அலைபேசியை மீட்ட கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு, அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் இருவரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .