2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 92% தபால்மூல வாக்களிப்பு பதிவு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாடாளுமன்ற தேர்லுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 8ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் 92 சதவீதமானமானவர்களின் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 13பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கான வாக்களிப்பு கடந்த 3, 5, 6ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.

இத்தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் வாக்களிப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் 8ஆம் திகதி மாலை 4.15 மணிவரை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 92 வீதமானவர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .