2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சுயநலவாதிகளை புறக்கணிக்கவும்: சி.வி ஆலோசனை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொடுத்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளுக்கு மாறாக சுயநலத்துடன் நடக்க சிலர் எத்தணிக்கின்றார்கள்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனங்கோணாமல் நடப்பதற்காக தமிழ் மக்களிடையே தேர்தல் மேடைகளில் பேசிய வசனங்களை மறந்துவிட்ட அவர்களைத் தவிர்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்த ஒரு தீர்மானத்துக்கு அனைவரும் வந்திருப்பார்கள்.

அந்த தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையீட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்.

ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவை. ஆயினும், ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு ஒரே கொள்கைக்காக தேர்தலில் போட்டியிடுபவர்கள், ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும் வசைபாடிக்கொண்டும் அரசியல் நாகரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமையினை காணும்போது பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது முடிவு சரியானது என்றே நான் கருதுகின்றேன்' என்று அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .