Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம் வரணி பகுதியில் கடந்த 01ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார்.
நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் குறித்த சந்தேச நபர்கள் மூவரையும் அடையாளம் காட்டினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த, 01ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த கொள்ளையர்கள் தனிமையில் இருந்த முதியவர்கள் இருவரையும் தாக்கி விட்டு மோதிரம் மற்றும் 20,000 ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
44 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago