2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

'போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.குகன்

போர்க்குற்றம் புரிந்த அனைவரும் சர்வதேச விசாரணைகளின் மூலமாக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போன்று, சர்வதேசம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை அல்லது இந்தியா ஆகியவற்றால் இந்த நாட்டு மக்களுக்கு முழுமையான அமைதியை வழங்க முடியாது.

ஏனெனில், இவர்கள் குறிப்பாக அமெரிக்கா ஒரு நாட்டுக்குள் நுழைந்து அந்நாட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி, அங்குள்ள வளங்களை சூறையாடவே முய்றசிக்கின்றன.

இந்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும். மக்களின் மனங்களை ஆற்ற வேண்டும்.

சர்வதேசமும், சர்வதேச விசாரணையின் ஊடாக உள்நாடும் சேர்ந்து உண்மையைக் கண்டறிவதற்காக குழு ஒன்றை அமைத்து அதனூடாக தெளிவான விசாரணைகளை ஏறு;படுத்த வேண்டும். இதன் மூலமே போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .