2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மதுபோதையில் முச்சக்கரவண்டி செலுத்தியவர் படுகாயம்

George   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் முச்சக்கரவண்டி செலுத்தியவர் மின் கம்பத்துடன் மோதியதில் அவரது விலா எழும்பு முறிவடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சுதுமலை அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் 24 வயதுடைய நபரே படுகாயங்களுக்கு உள்ளாகி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியினை செலுத்திய சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .