Super User / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(என். பரமேஸ்வரன்)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த 23 பெண்கள் இன்று யாழ். தெல்லிப்பளையில் வைத்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் விடுதலை செய்யப்பட்டனர்.
திருமணமான பெண்கள் அவர்களின் கணவர்களிடமும், ஏனையோர் பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் கர்ப்பிணியொருவரும் அடங்கியிருந்தார்.அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கர்ப்பிணியாகியதாகவும் அப்பெண்ணும் அவரின் கணவரும் சரணடைந்து தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2009 ஆண்டு ஆகஸ்ட் மாதம் புலிகள் அமைப்பின் 11,698 அங்கத்தவர்கள் சரணடைந்திருந்ததாகவும் அவர்களில் 305 பெண்கள் உட்பட 4,460 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர கூறினார்.
எஞ்சியுள்ள பெண்கள் நாளை சனிக்கிழமை வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
www.bcgrsrilanka.com எனும் இணையத்தளமும் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago