2021 மார்ச் 01, திங்கட்கிழமை

யாழில் டெங்கு நோயால் 3 நாட்களில் இருவர் பலி; 28 பேர் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மாவட்டத்தில் 3 நாட்களில் 28பேர் டெங்கு நோய்க்கு இலக்காகியதுடன் 2பேர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் செம்பியன் பகுதியில் இருந்து 22 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். குடாநாட்டில் கோண்டாவில், கொக்குவில், அரசடி போன்ற பகுதிகளில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றதாகவும், அப்பகுதி மக்கள் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வுடன் செயற்பட்டால் டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியுமென்றும் சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .