2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தொண்டையில் குளிசை இறுகியதால் 3 வயது குழந்தை மரணம்

Super User   / 2010 நவம்பர் 16 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ். மூளாய் பகுதியில், காய்ச்சலுக்குள்ளான 3 வயதான குழந்தையொன்றுக்கு கொடுக்கப்பட்ட பரசிட்டமோல் குளிசையொன்று தொண்டையில் இறுகியதால் மூச்சு திணறி குழந்தை இறந்த சம்பவம் இன்று  இடம்பெற்றுள்ளது.

காய்ச்சலுக்குள்ளான இப்பெண் குழந்தைக்கு தாயார் பரசிட்டமோல் ரக குளிசையொன்றை கொடுத்தபோது, அக்குளிசையை குழந்தை விழுங்கியதால் தொண்டையில்சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் குழந்தை இறந்ததாகவும் தெரியவருகிறது.

குழந்தையின் சடலம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .