Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கசிப்பு உற்பத்தி செய்வதற்கென கோட வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நபருக்கு 3 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்தைச் சேர்ந்த இந்த நபரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நேற்று யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 3 லட்சம் ரூபா அபராதம் விதித்ததுடன் அதனைச் செலுத்தத் தவறின் ஒரு வருட காலத்துக்கு சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .