2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வீதியில் நின்றிருந்த 4 இளைஞர்களுக்கு தண்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரட்ணம் கனகராஜா

யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை(17) அதிகாலை வீதியில் நின்றிருந்த நான்கு இளைஞர்களில் இருவரை சரீரப் பிணையிலும், ஏனைய இருவரையும் எட்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

குறித்த நால்வரையும் இன்று (17) அதிகாலை கைது செய்த நெல்லியடிப் பொலிஸார் தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே பதில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட நெல்லியடிப் பொலிஸார் அல்வாய்ப் பகுதியில் நான்கு இளைஞர்கள் நிற்பதை அவதானித்து அவர்களைச் சோதனை செய்தனர். இதன்போது, அவர்களிடமிருந்து ஒரு நெஞ்சாக்கு மற்றும் கூரிய கத்தியொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த நால்வரையும் கைது செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X