2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

5 சிறார்களும் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதி

Super User   / 2014 மார்ச் 25 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்துக்கொண்டு உள் நுழைந்து அவ்வீட்டில் 05 நாட்களுக்கு  உணவு சமைத்து உட்கொண்டதுடன், வீட்டிலிருந்த இலத்திரனியல் பொருட்களை திருடிய 05 சிறுவர்களையும் அச்சுவேலி அரசினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கூடத்தில் அனுமதிக்குமாறு யாழ். குருநகரில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.

இலண்டனில் வசிக்கும் ஒருவரின் மேற்படி வீட்டை அவரின் உறவினர் பாதுகாத்து வருகின்றார்.  இந்நிலையில், குறித்த சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் மேற்படி வீட்டின் கதவை உடைத்து, திருடி வந்துள்ளனர்.

குறித்த வீட்டின் பராமரிப்பாளர் திங்கட்கிழமை (24) மேற்படி வீட்டுக்குச் சென்றபோது,  சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டு பொலிஸில் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, மற்றைய நால்வரையும் திங்கட்கிழமை (25) அதிகாலை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

அத்துடன், .வர்களிடமிருந்து திருடிய பொருட்களை கைப்பற்றியதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அச்சுவேலியிலுள்ள பாடசாலையொன்றில்; கல்வி கற்கும் 13 வயதுடைய இருவரையும்  14 வயதுடைய இருவரையும்  17 வயதுடைய ஒருவரையுமே கைதுசெய்ததாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேற்படி சிறுவர்களை இன்று (25) யாழ். குருநகரில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே, நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .