2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

5 இற்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயின் தலை துண்டிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

5 இற்கும் மேற்பட்டவர்களையும் ஆடொன்றையும் கடித்ததாக கூறப்படும் கட்டகாலி நாயொன்றின் தலை துண்டிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ். சண்டிலிப்பாயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நாயானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் காணப்பட இதுதொடர்பில் பொதுமக்கள் சண்டிலிப்பாய் பிரதேச சுகதார வைத்தியதிகாரி பணிமனைக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த நாயின் தலை துண்டிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நாய் இதுவரை ஐந்துபேரை கடித்துள்ளதுடன் ஆடொன்றையும் கடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--