2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் 67பேர் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் வௌ;வேறு குற்றங்கள் புரிந்த 67பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ஃரி தெரிவித்துள்ளார். இன்று யாழ். பொலிஸ் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சூழல் மாசடைதலுக்கு காரணமாக இருந்த 6 பேரும், காசு மோசடி செய்த ஒருவரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 4 பேரும், சூதில் ஈடுபட்ட 5 பேரும், சட்டவிரோத கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 9 பேரும், கைகலப்பில் ஈடுபட்ட 38 பேரும், விபத்துக்கு காரணமாகவிருந்த 2 பேரும் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--