Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
காரைநகர் உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தோப்புக்காடு மற்றும் பலகாடு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ளதாக காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.ஜெயசீலன் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தோப்புக்காடு பகுதியில் 200இற்;கு மேற்பட்ட குடும்பங்களும் பலகாடு பகுதியில் 70இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வந்துள்ளனர். இவர்களில் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ள நிலையில் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பணிமனையுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தோப்புக்காடு மற்றும் பலகாடு பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விருப்பம்; தெரிவித்துள்ள 70 குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பம்; பற்றியும் தற்போது விரிவாக ஆராய்ந்து வருகின்றோம். பின்னர் இது தொடர்பில் யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கு அறிவித்து இக்குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
யுத்தம் காரணமாக 20 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களை விட்டு இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.ஜெயசீலன் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago