2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு கருத்துக்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நிறைவேற்று பணிப்பாளர் லெசந்திசில்வா சந்திரசேன மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் அத்துல கணேகொட ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்தக் கருத்தரங்கில், சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--