Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டப் பகுதியில் பிரதமரின் அமைச்சினால் இரண்டு கோடியே இருபது இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய கொள்கைகள், பொருளாதாரவிவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே சிவஞானசோதி அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
மேற்படி அமைச்சினூடாக அப்பகுதியில் புதிய வீட்டுத் திட்டமொன்று அமைக்கப்பட்ட வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் வீதிகளைப் புனரமைப்பதற்காக அமைச்சினால் இரண்டு கோடி இருபது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்படவுள்ள வீதிகளை புனரமைப்பு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025