Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“எனக்கும் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பு, யாழிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை நீண்ட நடைபெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியான விடயத்தில் நாங்கள் பல விடயங்களை ஆராய வேண்டிய நிலை இருக்கின்றது. இப்பொழுது அரசாங்கம் எடுத்துகொள்ளும் தீர்வு மக்களுக்கு போதுமானதாக இருக்காது எனவும் அது தொடர்பில் கரிசனை எடுக்கவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.
“நான் அது சம்பந்தமாக என்னால் முடிந்த வரை எல்லாவிதாமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.
“ நாங்கள் அரசியல் ரீதியாக பேசவில்லை. அரசியல் ரீதியாக பேசுவதற்கும் ஒன்றுமில்லை. என்னென்றால் நான் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் அவர் மக்கள் அமைப்பில் இருக்கும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு சம்பந்தமான சில விடயங்களை பேசவே வந்தார்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல் எவ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளப் போவாதாக அறிவித்திருந்த நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
02 Mar 2026