Editorial / 2018 ஜனவரி 17 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்


முன்னாள் தமிழக முதலமைச்சரும் தென்னிந்திய முன்னாள் நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இன்று யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது.
எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவர் என்.நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களும் ரசிகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடுபுடவைகள் வழங்கப்பட்டன.
கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான கோப்பாய் சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
2 hours ago