Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று (01) முற்பகல் 10 மணிக்கு, வடமராட்சி - குடத்தனையிலுள்ள அகரம் வளாகத்தில் தையல் பயிற்சி நிறைவு நிகழ்வு நடைபெற்றது.
அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் கி.மனோறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிகச் செயலாளர் க.கனகேஸ்வரன், வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலாளார் கு.பிரபாகரமூர்த்தி, பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமான சி. தியாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வில் வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலாளராக கடமையாற்றி யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள கனகசபாபதி கனகேஸ்வரனின் சேவை நலனைப் பாராட்டி அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தாலும், செல்வா விளையாட்டுக் கழகத்தினராலும் பொதுமக்களாலும் கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலாளராகப் புதிதாகப் பதவியேற்ற குமாரசாமி பிரபாகரமூர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட தையல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக வைத்திலிங்கம் வேதலிங்கத்தின் (மார்க்கண்டு) நினைவுநாளை நினைவு கூர்ந்து, அகரம் வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குடத்தனையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் குடத்தனை வடக்கைச் சேர்ந்த பலரதும் நிதிப் பங்களிப்பில் வறுமையில் வாழும் ஐந்து குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள், மற்றும் சைக்கிள்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பல மாணவர்களுக்கு நிதியுதவிகள், அகரம் கல்வி நிலையத்திற்கு கற்றலுக்குத் தேவையான உதவிகள் என்பனவும் வழங்கப்பட்டன.
இறுதியாக அகரம் தையல் பயிற்சியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. கண்காட்சியின் ஒரு கட்டமாக தையல் உற்பத்திகளின் விற்பனையும் இடம்பெற்றது.
48 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago