2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

’சுகாதார நடைமுறைகள் யாழில் பின்பற்றப்படுவதில்லை’

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக, யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தில், இன்றையதினம் (28) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும், சுகாதார திணைக்களத்தல் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள்  பின்பற்றுவதாக தெரியவில்லையெனவும் அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்று தனக்கு புரியவில்லையெனவும் கூறினார்.

குறிப்பாக வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணிக்கிறார்களெனத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் தற்போது சிலர்  தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்களெனவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகுமெனவும் கூறினார்.

அத்துடன், பஸ்ஸில் பயணம் செய்வோர் கட்டாயமாக நீங்கள்  பயணம் செய்யும் பஸ்ஸின் இலக்கம் தொடர்பான விவரங்களை கட்டாயமாக சேகரித்து வைத்துக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொண்ட மகேஷ் சேனாரத்ன, ஏனெனில் பஸ்ஸில் பணயித்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், அதே பஸ்ஸில் நீங்களும் பயணம் செய்திருந்தால் உங்களை சுகாதார நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாமெனவும் கூறினார்.

எனவே, பொதுமக்கள் குறித்த விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--