2024 மே 03, வெள்ளிக்கிழமை

சாந்தி எம்.பியால் காணி சுவீகரிப்பு; சம்பவம் உறுதியானது

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

வவுனியா – பாலி ஆற்றின் ஒரு பகுதி காணியை, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சுவீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளரால் ஒப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காடழித்தல் மற்றும் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரவில், காடழித்து விவசாயம் செய்யப்பட்டு வருவதுடன், பாலி ஆற்றின் ஒரு பகுதியில் அடாத்தாக காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி, காடழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்கவில்லையென, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு காணியை சுவீகரித்தார் என்பதற்கு அப்பால், சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற்றுக்கொள்ள எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்பது தொடர்பில், பிரதேச மக்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.

இவர் பதவியில் இருந்த காலத்தில் சுவீகரித்த காணியை 18 வயதான அவரின் மகனின் பெயரில் பதிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது தடுக்கப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவால் சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற வேண்டுமெனவும் அல்லது காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், காடழிப்பில் அழிவுக்குள்ளான பெறுமதி மிக்க தாவரங்களுக்கான நட்டஈட்டையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், மக்கள் வலியறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .