Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ள முடிவால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே தவிர, தமிழரசுக் கட்சிக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இதனால் தமிழரசுக் கட்சிக்கு இலாபமே கிட்டும்” என, வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (05) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்தமைக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், அது அவருக்காகத் தான். சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், மக்களின் ஆணையை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதைக் கூற வேண்டும். அவர் கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல விரும்புவது, பரிதாபமாக உள்ளது. இதனால் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். நிச்சயமாக தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
“உறவுகளை அவர் முறித்துக் கொள்வதால், எமது கட்சிக்கு எந்தத் தாக்கமும் ஏற்படாது. கடந்த காலங்களில், நாம் இத்தகைய பிளவுகளைச் சந்தித்துள்ளோம். எனினும், இன்னமும், நாங்கள் வலுவடைந்திருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரசமைப்பு யோசனை, திருப்தியானது என்று கூறமாட்டேன். தற்போதைய அரசமைப்புடன் ஒப்பிடும் போது, இடைக்கால அறிக்கையில் உள்ள சில விடயங்கள், முன்னேற்றகரமானவை. முன்னேற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா, இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago