Editorial / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
“மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம்” என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமது வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (21) காலை 8.30 மணியளவில் தாக்கல் செய்தனர்.
இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீதான நம்பிக்கையுடன், மக்கள் காத்திருக்கின்றார்கள். பிரதான 3 விடயங்களை முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், அன்றாடப் பிரச்சினை, அபிவிருத்தக்கானத் தீர்வு, அரசியல் உரிமைக்கான தீர்வு என்ற அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
“கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் மக்களை தவறான வழி நடத்தல்களின் கீழ் கொண்டு சென்றுள்ளார்கள். அந்த வழிநடத்தல்களை விலகி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம்”எனத் தெரிவித்தார்.
7 minute ago
10 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
19 minute ago