2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தூபி அமைக்கும் பணி ஆரம்பம்

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டடப் பணியாளர்கள், மேற்பார்வை பிரிவினர் ஆகியோரால், நில அளவுத்திட்ட பிரமாணங்கள் கணிக்கப்பட்டன.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில், மீண்டும் தூபியை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .