Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழில் போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
திங்கட்கிழமை (16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் யாழில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெருந்தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப்பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள் யாழ்ப்பாணம், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர்.
நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago