Princiya Dixci / 2016 மார்ச் 11 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
பொன்னாலை - மூளாய் வீதியால் நேற்று வியாழக்கிழமை (10) மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த 5 பவுண் தாலிக் கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி விவசாயப் பண்ணையில் பணியாற்றும் மேற்படி பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் முகத்தை மறைத்த ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
பறிக்கப்பட்ட தாலி 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையது எனத் தெரிவிக்கபடுகிறது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் கூறினர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago