2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லூரானின் வருடாந்த உற்சவம் 6ஆம் திகதி ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார்.

வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது முற்றிலும் பாதுகாப்புப் பிரிவோடு சம்பந்தப்பட்டமையால், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி நல்லூரானின் வருடாந்த உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .