2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பாசையூர் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

குருநகர் - பாசையூர் மீன் சந்தைகளில் நாளையில் இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படுமெனத் தெரிவித்த யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.
குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்தே, மேயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனவே குருநகர் - பாசையூர் மீன் சந்தை பகுதிக்கு வரும் யாராக இருப்பினும், அவர்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமெனவும், மேயர் தெரிவித்தார்.
மேலும், குருநகர் - பாசையூர் சந்தைக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே, அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .