2020 ஜூன் 04, வியாழக்கிழமை

'பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்கமுடியாது’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென்று, பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லையெனவும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினையெனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புகளைக் காரணங்காட்டி,  தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு சரியோ, பிழையோ ஆனால்,  அவர்கள்தான் மக்களுடைய பிரதிநிதிகளெனவும், சிவஞானம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X