எம். றொசாந்த் / 2017 ஜூன் 20 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார்.
இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட ஆசனங்களே தற்போதும் காணப்படுகின்றது. மாகாண சபை நிதி வீண்விரயம் ஆக்கப்படுவதாக பல தடவைகள் அவைத்தலைவர், சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டிப் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த ஆசனத்தில் அவைத்தலைவர், கடந்த 14ஆம் திகதி அமர்வில் மாத்திரமே அமர்ந்திருந்தார். அதன் பின்னர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, அவைத்தலைவர் ஆளுநரிடம் கையளித்தமையால், அவைத்தலைவர் பக்கம் சார்ந்துச் செயற்பட்டு உள்ளதாகவும் அதனால், இனிவரும் காலங்களில் அவர் அவைத்தலைவராக தொடர்ந்து இருப்பது அறமில்லை எனவும் ஆகையால், அவர் பதவி விலக வேண்டும் என்றும், பரவலாக கருத்துகள் முன்வைக்கபப்ட்டு வருகின்றது.
அத்தகைய, கருத்துகளுக்கு செவிசாய்த்து, அவைத்தலைவர் தனது பதவியை இராஜினமா செய்வார் எனில், தனக்கு என பிரத்தியேகமாக 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் சிம்மாசனம் போன்ற தோற்றப்பாட்டில் அமைக்கப்பட்டப் பிரத்தியேக ஆசனத்தில், ஒரு நாள் மாத்திரமே அமர முடிந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago