Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்) சார்பில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி, யாழ்ப்பாணம் - மார்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில், இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வேட்பாளராக இணைக்கப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago