2024 மே 02, வியாழக்கிழமை

போதகருடன் தொடர்பிலிருந்த 18 பேர் பலாலிக்கு

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிதர்சன்

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலியில்  அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12பேர் நேற்று முன்தினம் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று முன்தினம் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .