2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணல் கடத்தல்காரர்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் எழுதுமட்டுவாழ்

Editorial   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கூட மணல் கடத்தி வந்த டிப்பர் வாகனம் மின்சாரத் தூண்கள் மீது மோதியதில் 6 மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் தமக்கு ஏதாவது அச்சுறுத்தல் நிகழலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கேட்டறிந்த வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் ஊடாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .