Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், க. அகரன்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இன்று (10), கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம்:
வடக்கு கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
வவுனியா:
வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

14 minute ago
24 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
57 minute ago