2020 மார்ச் 30, திங்கட்கிழமை

யாழுக்கு அமைச்சர் ஆறுமுகன் விஜயம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்துக்கு விஜயமெனாற்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கு சைக்கிள்களை, யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கினார். 

அதே போல வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான மடிக்கணினிகளையும் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கினார்.

யாழ். மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொண்டமான, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த விஜயத்தின் போது பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த விஜயத்தில் அமைச்சின் அதிகாரிகள், அவரது கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் புதல்வருமான ஜீவன் தொண்டமான் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

இதேவேளை, இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுகிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கு இன்று காலையில் அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .