2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2021க்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது, 26 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 3 வாக்குகளும் வழங்கப்பட்டன.
15 பேர் நடுநிலை வகித்தனர். அத்துடன், முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்; சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன்மூலம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய ஆட்சி 2021ஆம் ஆண்டில் நீடிக்கும்.

இன்றைய வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .