2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

யுவதியின் பொறுப்பற்ற செயல்: 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

Niroshini   / 2020 நவம்பர் 19 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி செயற்பட்ட யுவதியால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யுவதியொருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், குறித்த யுவதி அறிவுறுத்தல்களை மீறி ஓட்டோவில் உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று வந்த நிலையில், அது தொடர்பிலான தகவல்களை அறிந்து கொண்ட சுகாதார பிரிவினர், யுவதியின் குடும்பத்தினர், ஓட்டோ சாரதியின் குடும்பத்தினர், யுவதி சென்ற உறவினர் குடும்பம் ஆகிய மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேரை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .